Golden Point Award 2017 Workshop Series – Tamil Short Story | Peatix tag:peatix.com,2011:1 2019-11-02T01:52:44+08:00 Peatix Arts House Limited Golden Point Award 2017 Workshop Series – Tamil Short Story tag:peatix.com,2017:event-258264 2017-05-20T14:00:00SGT 2017-05-20T14:00:00SGT நன்கு அறியப்பட்ட சிறுகதையாசிரியர் ஜெயந்தி சங்கர் நுட்பமானதொரு சிறுகதைப் பயிலரங்கை நடத்த இருக்கிறார். கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களாகும் சாத்தியங்கள் ஆராயப்படும்..1. யாருக்காக சிறுகதைகள் எழுதுகிறோம்? ஏன் எழுதுகிறோம்? சிறுகதைகள் எழுதுவதன் பொது நோக்கங்கள் எவை?2. எழுதப்படும் சிறுகதை யாரை கவர்வது முக்கியம்? எழுதும் என்னையா சென்றடையும் வாசகனையா? ஒரு சிறுகதையை எழுதுகையில் அதன் வாசகனைக் கருத்தில் கொள்வது தேவையா? எந்தளவுக்குத் தேவை? கருவிலா உருவிலா? 3. ஒரு சிறுகதை சதுரத்தின் நான்கு சட்டத்துக்குள்ளிருந்து எவ்வாறு மீறுகிறது? அதென்ன சதுரம்? மீறுவதனால் அச்சிறுகதை எவ்வாறு தன்னிடத்தை அழுந்தப்பதிக்கிறது?4. சமகாலத்தில் எழுதப்படும் சிறுகதைகளின் போக்குகளைக் கவனித்தல் நமது ஆக்கங்களை எவ்வாறு மேம்படுத்தும்? தொடர் வாசித்தல் கோரும் உழைப்பும் முனைப்பும் ஏன் முக்கியம்?5. சிங்கப்பூர் படைப்புகள் என்று எவற்றை சொல்வோம்? உள்ளூர் சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றை எழுதுகையில் நாம் கவனிக்க வேண்டியவை யாவை? Renowned short story writer Jayanthi Sankar will conduct an intensive workshop on short story writing. The possibilities of answers to the following questions will be explored during the session: Who are we writing short stories for? Why do we write them? What are the general intentions for writing short stories? Who should the short story attract? The one who writes or the one who would read it? Should I have my reader in mind while writing a short story? To what extent? In theme or form? How does a short story transcend beyond the square? What is that square? By that transcending, how does the short story strongly reaffirms its place? How does observing the trends of contemporary short stories help us in improving our works? Why are focus and effort in continuous reading very important? What is Singapore fiction? What are the features we need to pay attention to while writing local issues, social problems in fiction?பயிலரங்கு நடத்துபவரைப் பற்றி சில வார்த்தைகள்:உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ள ஜெயந்தி சங்கர் எழுதியுள்ள 35க்கும் அதிகமான நூல்கள் ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இடிதெய்வத்தின் பரிசு என்ற சிறார் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஆனந்தவிகடன் விருது2016 உள்ளிட்ட பல பரிசுகளும் விருதுகளும் வாங்கியுள்ளார். 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் வேற்று மொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யமொழி மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு கண்டுள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கியுள்ளார்.About the Facilitator: Jayanthi Sankar has been creatively active for the past twenty-one years in short stories, novels, translation and essays. Several of her books have been awarded by renowned organisations. Her short story “Read Singapore”, published in the quarterly magazine Ceriph – ISSUE TWO – 2010, has been included in the anthology The Epigram Books Collection of Best New Singaporean Short Stories: Volume One. The same short story was translated to be included in the Russian anthology: To Go to S'pore, contemporary writing from Singapore, edited by Kirill Cherbitski. She has started writing more in English in recent years. Having written primarily in Tamil, she has authored more than 35 books. Three of her short story collections have been shortlisted for the Singapore Literature Prize. Her works have been published by several magazines such as The Wagon and in opinion. ​She has a unique interest in other cultures, especially the Chinese culture. She has been invited to participate in panel discussions in various festivals including Singapore Writers Festival and Seemanchal International Literary Festival. Born and brought up in India, she has lived in Singapore since 1990.போட்டி பற்றி தங்க முனை விருது, தேசத்தின் நான்கு அதிகாரத்துவ மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவற்றில் நடத்தப்படும் சிறுகதை மற்றும் கவிதைக்கான சிங்கப்பூரின் முதன்மைப் படைப்பிலக்கியப் போட்டியாகும். தேசிய கலைகள் மன்றத்தால் 1993 முதல் தொடங்கப்பட்ட இந்தத் தேசிய படைப்பிலக்கியப் போட்டி, இலக்கிய உன்னதத்திற்கான முக்கிய தளமாக விளங்குவதுடன் புதிய எழுத்தாளர்களையும் தோற்றுவிக்கிறது. புதிய படைப்பிலக்கியத் திறனாளர்களை அடையாளங்கண்டு பேணுதல், சிங்கப்பூரில் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியத் திறனை வளர்த்தல், சிங்கப்பூரில் படைப்பாக்கச் சிந்தனை மற்றும் இலக்கிய வெளிப்பாட்டிற்கான உகந்த சூழலை உருவாக்குதல் ஆகிய குறிக்கோள்களை இந்தப் போட்டி கொண்டுள்ளது.About the Golden Point Award: The Golden Point Award is Singapore’s premier creative writing competition for Short Story and Poetry in the nation’s four official languages: English, Chinese, Malay and Tamil. Established by the National Arts Council since 1993, the national literary writing competition is a significant platform for literary excellence and launching new writers. The competition aims to identify and nurture new creative writing talent, develop the literary penmanship of writers in Singapore and to create a conducive environment for creative thinking and literary expression in Singapore.